பிரஸ்ணம் என்றால் என்ன?

பிரஸ்ணம் என்றால் கேள்வி - பதில் என்று பொருள்படும். தூய தமிழில் சொல்வதென்றால் ஆரூடம். தமிழர் தம்முடைய வானியல் சார்ந்த கண்டுபிடிப்புகளில் பிரஸ்ணம் என்பது மிக முக்கியமானதாகும். நம்முடைய முன்னோர்கள் வானியல் சார்ந்த விடயங்களை கிரகங்கள் ரீதியாக ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த கிரக அமைப்புகள் - கதிர்கள் எப்படி மனிதர்கள் மீது படிந்து எந்தெந்த மாதிரி பலன்கள் நடைபெறுகின்றன என்பதையும் நமக்கு எடுத்துரைத்துள்ளனர். அதில் மிக முக்கியமானதாகவும் சூக்ஷ்மமாகவும் இந்த பிரஸ்ணம் என்பது இருக்கிறது.

கேள்வி கேட்க ஒரு நபர் - பதில் சொல்ல ஒரு நபர் என இரு நபர்களை உள்ளடக்கி இருக்கிறது. அன்றயை தினம் கிரகங்களுடைய இருப்பை வைத்து எதிர்காலத்தை உரைக்க முடியும். இந்த பிரஸ்ணம் முழுவதும் தமிழருடைய சொத்து. பிரஸ்ணத்தில் பலவிதம் உண்டு. சோழிப் பிரஸ்ணம் -

chozhi

தற்காலிக பிரஸ்ணம் - தேவ பிரஸ்ணம் - புஷ்பப் பிரஸ்ணம் - எண் பிரஸ்ணம் - ஹோரை பிரஸ்ணம் - லக்னப் பிரஸ்ணம் - சகுணப் பிரஸ்ணம் என பலவிதமான பிரஸ்ணங்கள் இருக்கிறது.

ராசிபீடம்

மீனம் மேஷம் ரிஷபம் மிதுனம்
கும்பம் ராசிபீடம் கடகம்
மகரம் சிம்ஹம்
தனுசு விருச்சிகம் துலாம் கன்னி