சூரியன்:


தன்மை ஆண்
வடிவம் சமன்
நிறம் சிவப்பு
குணம் குரூரர்
பிணி பித்தம்
திக்கு நடுவில் - கிழக்கு
ரத்தினம் மாணிக்கம்
தான்யம் கோதுமை
புஷ்பம் செந்தாமரை
சமித்து எருக்கு
வாகனம் மயில் தேர்
சுவை தாமிரம்
உலோகம் செம்பு
ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் 1 மாதம்
வஸ்திரம் சிவப்பு
தேவதை சிவன்
ஆசனம் வட்டம்
ராசி சிம்மம்
உச்ச ராசி மேஷம்
 நீச ராசி துலாம்
நட்பு ராசி தனுசு - கும்பம் - மீனம்
மூலத் திரிகோணம் சிம்மம்
பகை ராசி ரிஷபம் - மிதுனம் - கடகம் - கன்னி - விருச்சிகம் - மகரம்
நக்ஷத்ரங்கள் கார்த்திகை - உத்திரம் - உத்திராடம்
திசை வருடம் 6 வருடங்கள்
நட்பு கிரகம் வளர்பிறை சந்திரன் - செவ்வாய் - குரு
பகை கிரகம் சுக்கிரன் - சனி
பார்வை 7ம் பார்வை மட்டும்
காரகன் தந்தை - சரீரம் - ஆன்மா
உறுப்பு மார்பு
உபக்கிரகம் காலன்


பொது பலன்:

சூரியன் ராஜகிரகம் என அழைக்கப்படும். சூரியன் வலுவாக இருந்தால் மட்டுமே ஒருவர் தலைமைப் பதவிக்கு வர இயலும்.

சூரியன் ஆத்மகாரகன் எனப்படுகிறார். பிதுர்க்காரகனாகவும் செயல்படுகிறார். சூரியனை வைத்தே லக்னம் கணிக்க முடியும். இவருடைய மற்ற முக்கிய காரகங்கள்: தகப்பனார் - ராஜ்ய அனுகூலம் - சம்பாத்திய திறன் - உடல்பலம் - ஆத்மபலம் - ஆண்மை - பரிசுத்தம் - நேர்மை - பராக்கிரமம் - தகப்பனார் வழி சொத்துக்கள் - அரசியல் தொடர்பு - காடு - மலை - வயல் - புகழ் - கீர்த்தி.

சூரியனைக் கொண்டே உயிரின் வலுவையும் அறிய முடியும். சூர்யன் தான் இருக்கும் இடத்தில் இருந்து 180 டிகிரி பார்ப்பார். அதாவது ஏழாவது ஸ்தானத்தைப் பார்ப்பார். சூரியனே ஜாதகத்தில் சம்பாத்தியத்தை சொல்லும் காரகனாவார். எனவே அவருடன் பகையான கிரகங்கள் இணைவது நல்லதல்ல. சூரியனுக்கு கேந்திரத்தில் ராகு இருந்தாலோ அல்லது சனி இருந்தாலோ சம்பாதிக்கும் போது தொல்லைகள் வரலாம். அதே போல் அஷ்டமாதிபதி எனப்படும் ஒரு ஜாதகத்திற்கு எட்டுக்குடையவரும் சூரியனுடன் இணைவது சிறந்ததல்ல. சூரியன் கேந்திர ஸ்தானங்களான 1 - 4 - 7 - 10 ஆகியவை நல்லதைக் கொடுக்கும்.

சூரியன் ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் இருப்பது என்பது சில சிரமங்களைக் கொடுக்கலாம். ஏனென்றால் சூரியன் இயற்கை பாபர் என்பதால் அவர் ஐந்தாமிடத்தில் இருப்பது என்பது புத்திரங்கள் வழியில் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். பூர்வீகம் சம்பந்தமான விஷயங்களை நமக்குத் தெரிவிப்பதும் சூரியனே.

ஜாதகத்தில் சூரியன் கேந்திர ஸ்தானமான சப்தம ஸ்தானத்தில் இருக்கும் போது மனைவி வழியில் சில சங்கடங்களைத் தருகிறார். இது அனுபவப் பூர்வமாக சொல்லப்படுகிறது. சிலருக்கு பகையான ராசிகளில் சப்தம ஸ்தானங்களில் அமரும் போது பெரும் பாதிப்புகளுக்கு ஆளாவதைக் காண முடிகிறது. மற்ற ஸ்தானங்களை விட இந்த இரண்டு ஸ்தானங்களில் அமரும் போது பாதிப்புகளின் மதிப்பு அதிகமாக இருக்கிறது.

பத்தாம் இடத்தில் அமரும் சூரியனால் பெரும் லாபம் பெற முடியும்.

சூர்யன் த்யானம்:

ஜபாகுஸும ஸங்காஸம் காஸ்யபேயம் மஹாத்யதி
தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்!காயத்ரி:

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்!
ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்!
ஓம் பாஸ்கராய வித்மஹே மஹா ஜ்யோதிஸ்சக்ராயா தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்!
ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்!
ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாதேஜாய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்!
ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்!
ஓம் லீலாலாய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்!
ஓம் பிரபகராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்!